'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரத்திற்கு தமிழில் 'சிம்பா' மற்றும் 'என்னோடு விளையாடு' என இரண்டு படங்களே கைவசம் உள்ளன. இதனால் தனது கவனத்தை மலையாள திரையுலகை நோக்கி செலுத்த துவங்கியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன் ஜெயராஜ் இயக்கிய 'பார் தி பீப்பிள்' படத்தின் மூலம் கேரளாவில் வலுவான அடித்தளம் போட்டுவைத்த பரத், அதை இதுநாள் உபயோகப்படுத்தாமல் இருந்தார். ஆனால் இங்கே நிலைமை சரியில்லாமல் இருப்பதால் கடந்த வருடம் 'கூதரா' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் மீண்டும் காலடி வைத்தார்.
அதற்கேற்ற மாதிரி இப்போது சில வாய்ப்புகளும் அவரைத்தேடி வருகின்றன. அதில் ஒன்றுதான் அனில் ராதாகிருஷ்ணன் மேனனின் இயக்கத்தில் உருவாகும் லார்ட் லிவிங்க்ஸ்டன் 7௦௦௦ கண்டி.. சுருக்கமாக எல்.எல்.7.கே படத்தில் நடித்து வருகிறார் பரத். மலையாளப்படம் என்றாலும் இதில் பரத் பேசுவது எல்லாமே தமிழில் தானாம். காரணம் காடுகள், மலைப்பகுதிகளுக்கு சென்று சாகசம் செய்வதில் ஆர்வலரான பரத், சென்னையில் இருந்து கேரளா வனப்பகுதிகளுக்கு செல்கிறார். அங்கிருப்பவர்களுடன் தமிழிலும் அவருக்கு தெரிந்த அரைகுறை மலையாளத்திலும் பேசுவதாக காட்சிகள் அமைந்திருக்கிறதாம்.