ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழகத்தில் விஜய் டி.வி., விருதுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்தாண்டு 8 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வந்த விஜய் டிவி விருதுகள் இந்தாண்டு கொஞ்சம் சொதப்பிவிட்டதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தது. போதாத குறைக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி எனும் டிடியும், தன் பங்குக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வழங்குகிறேன் என்ற பேர்வழியாக ஓவராக பேச, இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளார் டிடி.
இதுகுறித்து டிடி தன் டுவிட்டர் வலைபக்கத்தில் கூறியிருப்பதாவது, அன்பா சொன்னவங்களுக்கும், மோசமாக சொன்னவங்களுக்கும் நன்றி. உங்களது கருத்துக்களை நான் ஏற்கிறேன், அடுத்தமுறை நிச்சயம் நான் சிறப்பாக செய்வேன், என் குடும்பத்தினரிடமும், டிவி சேனலிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.