Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உங்கள் எதிர்பார்ப்பை ராக்சஷடு பூர்த்தி செய்யும் - தெலுங்கு இசை வௌியீட்டு விழாவில் சூர்யா பேச்சு

19 மே, 2015 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Surya-speech-in-Rakshasudu-Movie-Audio-Launch

சூர்யா, நயன்தாரா நடித்துள்ள 'மாஸ்' திரைப்படம் தெலுங்கில் 'ராக்ஷசடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி தமிழில் வெளிவரும் அதே 29ம் தேதியன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீடு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ் மற்றும் இயக்குனர் கோதண்டராமி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு 'ராக்ஷசடு' படத்தின் இசையை வெளியிட்டனர். விழாவில் சூர்யா, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, பிரேம்ஜி, ஸ்ரீமன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது, “கோதண்டராமி ரெட்டி அவர்களுக்கு நன்றி, அவருடைய டைட்டிலைத்தான் எங்களது படத்திற்குப் பயன்படுத்தியுள்ளோம், அதற்கு அவருக்கு நன்றி. அந்தப் படத்தைப் போன்றே எங்களுக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்புகிறோம். பிரபாஸ், அவர் மிகவும் இனிமையானவர் என்று தெரியும். அவர் உங்களுடைய டார்லிங். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் அதற்கும் மேலே. அவருடைய உபசரிப்பிலும், அன்பிலும் நான் அசந்து போனேன். இந்தியாவே அவருடைய 'பாகுபலி' படத்திற்காக மிகவும் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகமும் அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. எங்களுடன் நேரம் செலவழிப்பதற்கு பிரபாஸ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னுடைய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உங்களிடம் அருமையாக எடுத்துச் சென்று வருகிறார். 'மாஸ்' படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் மிகவும் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். நிச்சயம் இந்தப் படம் மூலம் உங்களது எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்.


எப்போதும் போல் உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். உங்கள் அன்புக்கு நன்றி,” என்று சூர்யா பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in