தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
2012ல் இருந்து இந்திப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் சன்னி லியோன். சில படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியவர். ஆனால், இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சன்னி லியோன், 2011ம் ஆண்டிலேயே டேனியேல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து கொண்டவர்.
இந்த நிலையில், இந்தி சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவிலும் கொடி நாட்ட வேண்டுமென்று ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடினார் சன்னிலியோன். ஆனால் அந்த பாடல் ஹிட்டாகவில்லை. அதனால் அதன்பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், தெலுங்கு, கன்னடத்தில் சில படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் சன்னிலியோன்.
இப்படி இந்திய சினிமாக்களில் பிசியாக நடித்து வரும் சன்னி லியோன், ஆபாச படங்களிலும் நடிப்பதை விடவில்லை. அவர் நடித்துள்ள ஆபாச வீடியோக்களும் இணையதளங்களில் உலவிக்கொண்டிருப்பதால், அவர் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகள் அவருடன் பேசுவதைகூட விரும்புவதில்லையாம். அவருடன் பேசிப்பழகினால் தங்களையும் ஆபாச பட்டியலில் சேர்த்து விடுவர்கள் என்று ஒதுங்கியே நின்று வருகிறார்கள்.
இந்தநிலையில், மும்பையில் உள்ள ஜன்ஜக்ருதி சமிதி என்றொரு இந்து அமைப்பு சன்னி லியோன் மீது மும்பை போலீசில் ஒரு புகார் அளித்துள்ளது. அதில், கன்டாவில் இருந்து இந்தியா வந்து இந்த நாட்டின் கலாச்சாரத்தை சன்னிலியோன் சீரழித்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவரை இந்தியாவில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாம். இதையடுத்து சன்னிலியோன் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.