‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டோலிவுட்டில் தயாராகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி திரைப்படத்தின் புகைப்படங்கள், அப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. பாகுபலி படத்தின் கதாப்பாதிரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் இயக்குநர் ராஜமௌலி இது வரை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், நாயகன் பிராஸ், நாயகி அனுஷ்கா, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சத்யராஜ், நடிகர் சுதீப் என பலரது கதாப்பாத்திரங்களை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வகையில் இப்படத்தில் அவந்திகாவா நடித்துள்ள தமன்னாவின் புகைப்படத்தை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். அழகு பதுமையான அவந்திகாவாக மாறி இருக்கும் தமன்னாவின் புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.