'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் புலி. இப்படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்றுதான் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது, வருகிற செப்டம்பர்-19ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று புலி வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பாயும்புலி படத்தையும் அதே விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் இப்போது விஜய்யின் புலி வெளியாகயிருப்பதை அறிந்து, பாயும் புலி ரிலீஸ் தேதியை மாற்றி விட்டார்களாம்.