Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம் ?

18 மே, 2015 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vigensh-Sivan-marriage-held-at-last-week

நடிகை நயன்தாராவுக்கும், நானும் ரௌடிதான் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் உள்ள சர்ச்சில் கடந்த வாரம் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நாயகி. படப்பிடிப்பின் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி இருவரும் காதலில் விழுந்த்தாகச் சொல்லப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மொரீஷியஸ் தீவிற்கு சுற்றுலா சென்று வந்ததாகவும், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே தன்னுடைய பெற்றோர்களிடம் நயன்தாரா, விக்னேஷ் சிவனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கிடையே உள்ள காதலைப் பற்றிச் சொல்லி விட்டார் என்கிறார்கள். இப்போது பெற்றோர் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள், சில முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள கடந்த வாரம் இருவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாகச் சொல்கிறார்கள்.


நயன்தாராவிற்கு தற்போது பல படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வருவதால் திருமண விவகாரத்தை ரகசியமாகவே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். நயன்தாராவின் இதற்கு முந்தைய சிம்பு, பிரபுதேவா உடனான காதல் விவகாரங்கள் கூட இப்படித் திருமணம் வரை பரபரப்பாகப் பேசப்பட்டதுண்டு. ஆனால், விக்னேஷ் உடனான காதல் விவகாரம் சீரியசான ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். எப்படியோ காதலர்களாக வாயைத் திறந்து சொல்லும் வரை இது வதந்தியா அல்லது உண்மையா என்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in