ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் சிம்புவும் நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன் பின் தமிழில் அவருக்குப் பெரிதாக எந்த வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால், தெலுங்கில் அவருக்குத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கு பலருடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். சமீப காலமாக அங்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தவருக்கு பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 'ஜோதி லட்சுமி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படம் இது.
நேற்று சார்மியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். மிகவும் அருமையாக இருந்த டிரைலர் தெலுங்குத் திரையுலகினரிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ராம் கோபால் வர்மா உட்பல பல தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் அந்த டிரைலரைப் பாராட்டி வருகின்றனர். சார்மிக்கு இந்தப் படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கும் என்று சொல்லி வருகிறார்கள்.