தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எலி படத்தை பள்ளி சிறுவர்களை குறி வைத்தே நடித்து வந்தார் வடிவேலு. அதனால், கோடைவிடுமுறையில் எப்படியேனும் படத்தை திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.
இருப்பினும், மே மாதம் முதலில் வெளியிட நினைத்தது நடக்கவில்லை என்பதால், மே மாதம் இறுதியிலாவது வெளியிட்டு விடவேண்டும் என்று இப்போது வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஆனால், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து விடும் என்பதால் சிறுவர்களுக்கான படம் என்று மட்டுமே இதுவரை பப்ளிசிட்டி செய்து வந்த எலி யூனிட்டினர். இப்போது இது 6ல் இருந்து 60 வயது கொண்டவர்களுக்கான படம் என்று கூறி வருகின்றனர்.
மேலும், இந்த படத்தை மற்ற ஹீரோக்கள் யாரும் போட்டியாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக, மற்றவர்களெல்லாம் சிக்ஸ்பேக் வைப்பார்கள். ஆனால் நான் சிக்ஸ்பேக் போட்டியில் இறங்குவதில்லை. காரணம் நமக்கு எப்பவுமே சிங்கிள் பேக்தான். நம்ம ரூட்டே வேற என்று கூறி தொப்பையை தடவுகிறார் வடிவேலு.