ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகையான ஷிகா ஜோஷி, மும்பையில் உள்ள தனது தோழியின் வீட்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஷிகா, பாத்ரூமில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். பல நாட்களாக வேலை தேடியும் சரியான வேலை கிடைக்காதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஷிகா, சமீபகாலமாக தனது தோழி மது பாரதி மற்றும் அவரது கணவர் குடியிருக்கும் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாகவும், கழுத்தை அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஷிகாவின் தோழி மது பாரதி கூறுகையில், இரவு 7 மணியளவில் மது அருந்திய ஷிகா, சிறிது நேரத்தில் பாத்ரூமிற்குள் சென்று தாழ்இட்டுக் கொண்டதாகவும், வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.