ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஊஹலு குசகுசலாடே என்ற வெற்றிப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர் ரஷி கண்ணா. இப்படம் வெற்றி பெற்றாலும், ஒரேமாதிரியான கதாபாத்திரங்களில் நடித்ததனால் இவர் கிளாமர் ரோலில் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் டோலிவுட் தயாரிப்பாளர்கள். ஆனால் ஜோரு என்ற படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்த ரஷி கண்ணா எல்லோரையும் கவர்ந்தார். ஆனால் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜில் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ரஷி கண்ணா தனது நடிப்பாற்றலால் வெற்றியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார். இதற்கு காரணம் ஜில் படத்தில் பிரபல ஹீரோவான கோபிசந்துடன் லிப் லாக் காட்சிகளில் படு ஜோராக நடித்ததே ஆகும். தானும் கிளாமராக நடிக்க முடியும் என்று நிரூபித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தீபமுண்டகானே இல்லு சக்கபெட்டுகொவாலி அதாவது காற்றுள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னுடைய சம்பளத்தை ரூ.50 லட்சமாக உயர்த்திவிட்டார். அதற்கு தயாரிப்பாளர்களும் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாராகிவிட்டனர். இதன் மூலம் இவரும் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறுவது தெளிவாக தெரிகின்றது.