மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோலிவுட்டில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படம் உலகம் முழுவதும் மே 14 ஆம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி நடைப்போட்டு வரும் லயன் பட திருட்டு விசிடிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வெளிவந்த சில நாட்களிலேயே ரூ.5.5 கோடி வசூல் செய்த லயன் படத்தின் திருட்டு விசிடிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல கடைகளில் கிடைப்பதாக தகவலறிந்த போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு மாநிலங்களிலும் பெருமளவு லயன் பட திருட்டு விசிடிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏ சென்டரைக் காட்டிலும் பி,சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள லயன் படத்தின் வசூல் திருட்டு விசிடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.