ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அந்நியன் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலம் தனது திரை இசைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த முதல் பாடலே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தடுத்து, வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க, ஆயிரத்தில் ஒருவனில் உம் மேல ஆசைதான், மதராசப்பட்டினத்தில் பூக்கள் பூக்கும் தருணம் என பல பாடல்களை பாடிய வந்த ஆண்ட்ரியாவுக்கு, துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் பாடிய கூகுள் கூகுள், அஞ்சானில் ஏக் தோ தீன் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
அதனால் நடிப்பை விட ஆடியோ அளவில் ஆண்ட்ரியாவின் மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறி நிற்கிறதாம். அந்த வகையில், மேல்தட்டு பாடகிகளுக்கு இணையான சம்பளத்தை பாடுவதற்காக பெற்று வரும் ஆண்ட்ரியா, தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் அவ்வப்போது பாடி வருகிறார்.