டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் அது எந்த நடிகரோட படமாக இருந்தாலும் நோ சொல்கிற அதிரடியான நடிகை தான் பார்வதி மேனன். மேனன் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்ட தைரியமான 'பார்வதி'.. படங்களில் நடிப்பது, விழாக்களில் கலந்துகொள்வது, மேக்கப் போட்டுக்கொள்வது என எதிலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.. அதுமட்டுமல்ல அவரது ஹேர் ஸ்டைல் கூட பாப் கட்டிங் மாடலில் தான் இருக்கும்.
அதனால் தான் என்னவோ பெண்களை மையப்படுத்திய படம் என யாராவது கதை சொல்லவந்தால் கூட டென்சனாகி விடுகிறார் பார்வதி. “இதுநாள் வரை வெளியான ஹீரோயிச படங்களை எல்லாம் இது ஆண்களை மையப்படுத்திய படம் என்று எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறார்களா..? ஆணைப்போல பெண்ணும் ஒரு பிறவி தானே.. அப்புறம் ஏன் 'பெண்களை மையப்படுத்திய' படம் என சொல்கிறீர்கள்.. இந்த வார்த்தையை கேட்டாலே படம் பார்க்கவரும் ரசிகர்கள் தெறித்து ஓடுகிறார்கள். அந்த வார்த்தையையே நான் வெறுக்கிறேன்” என கொந்தளிக்கிறார் பார்வதி.