இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தற்போது தான் வெளியாகி வெற்றி பெற்ற லயனின் கர்ஜனை ஓய்வதற்குள் நந்தமூரி பாலகிருஷ்ணா தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார். அவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் டிக்டேட்டர் ஆகும். இந்த புதிய படத்தின் தொடக்க விழா இந்த மாதம் 29ம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் பாலைய்யாவுக்கு இரண்டு கதாநாயகிகளாம். பிரபல நடிகைகளான நயன்தாரா மற்றும் அஞ்சலி பாலைய்யாவுடன் ஜோடி சேருகின்றார்களாம். ஏற்கனவே நடிகை நயன்தாராவும், பாலகிருஷ்ணாவும் இணைந்து சிம்ஹா படத்தில் நடித்தது நினைவிருக்கலாம். அந்த படம் மெகா ஹிட்டாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் இந்த வெற்றி கூட்டணி அந்த மாஜிக்கை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை லக்ஷ்யம் பட புகழ் ஸ்ரீவாஸ் இயக்குகிறார். பிரபல கதாசிரியர்களான கொன வெங்கட் மற்றும் கோபி மோகன் ஆகியோர் இந்த படத்திற்கு கதை எழுதுகின்றனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.