Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாப்சி ஆரம்பித்துள்ள 'திருமணத் தொழிற்சாலை'

16 மே, 2015 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Tapsee-starts-wedding-factory

'ஆடுகளம்' படத்தில் அறிமுகமான நாயகி டாப்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'காஞ்சனா 2' படம் மூலம் தமிழில் மீண்டும் வெற்றியை ருசித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு உடனடியாக அடுத்தடுத்து இரண்டு படங்கள் கிடைத்துள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படத்திலும், ஜெய் ஜோடியாக மற்றுமொரு படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 'காஞ்சனா 2' படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றுள்ளதால் அங்கும் அவருக்கு புதுப் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.


இதனிடையே டாப்சி அவருடைய தங்கை மற்றும் சில தோழிகளுடன் சேர்ந்து 'வெட்டிங் ஃபேக்டரி' என்ற திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை பார்த்தவர் டாப்சி. அதற்குப் பின் மாடலிங்கில் நுழைந்த பின்னர் சினிமா நடிகையாகவும் ஆனார்.


இப்போதெல்லாம் பல நடிகைகள் சினிமாவில் மட்டும் நடிக்காமல் சொந்த கம்பெனி ஆரம்பித்து புதுப் புது வியாபாரங்களை செய்வதிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். நடிகை தமன்னா கூட ஜுவல்லரி டிசைனிங் பிஸினசை ஆரம்பித்துள்ளார். நடிப்பில் டாப்பில் வருகிறார்களோ இல்லையோ தங்களது சொந்த பிஸினஸில் டாப்பில் வருவதற்கு அவர்கள் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in