ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலக சர்வதேச திரைப்பட விழாவில் மிகவும் பெரியது, புகழ்பெற்றது பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவாகும். இந்த ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த 13ந் தேதி தொடங்கியது. வருகிற 24ந் தேதி வரை நடக்கிறது.
ஆஸ்கர் விழாவில் ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். வெளிநாட்டு படங்கள் பிரிவு என்ற வகையில் மட்டும் மற்ற படங்களுக்கு விருது வழங்கப்படும். ஆனால் கேன்ஸ் திரைப்பட விழா உலக திரைப்படங்களுக்கு பொதுவானது. கேன்ஸ் திரைப்பட விருதுக்கு உலக அங்கீகாரம் இருப்பதால் உலகில் உள்ள அத்தனை சினிமா நட்சத்திரங்களும் அங்கு குவிகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நட்சத்திரகங்ள் கேன்ஸ் திரைப்பட விழாவவை தவற விடுவதே இல்லை.
இந்த ஆண்டு திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யாபாலன், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், கேத்ரினா கைப் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். மல்லிகாவும் கேத்ரினாவும் திரைப்பட விழா தொடங்கும் முன்பே பிரான்ஸ் சென்று விட்டார்கள். தினமும் விழாவுக்கு சென்று உலக படங்களை பார்த்து வருகிறார்கள். ஐஸ்வர்யராவும், சோனம் கபூரும் நேற்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றனர்.
திரைப்பட விழாவையொட்டி நடைபெறும் கருத்தரங்குகள், கண்காட்சிகள், விவாத அரங்குகளிலும் இவர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். உலக திரைப்பட புகைப்பட கலைஞர்கள் பாலிவுட் நட்சத்திரங்களை துரத்தி துரத்தி படமெடுத்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் ஐஸ்வர்யரா ராய் இந்த ஆண்டு எப்படி இருக்கிறார், என்ன மாதிரி உடைகள் அணிகிறார் என்பதை அப்படியே பதிவு செய்ய அவர் தங்கியிருக்கும் ஓட்டல் எதிரிலும் விழாவிற்கு அவர் வரும் பாதையிலும், ரெட்கார்ப்பட் வரவேற்பு பகுதியிலும் குவிந்திருக்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் இருந்து யாரும் கான் திரைப்பட விழாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் எதுவும் இல்லை.