விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் - விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் 'பாயும் புலி'. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளார்கள். அதில் விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்துள்ளார்கள்.
அது பற்றி விஷால் கூறியிருப்பதாவது, “சுசீந்திரனின் படங்களில் கிளைமாக்சில் நடிப்பது ஒரு நடிகனாக எனக்கு மிகவும் கடினமாக இருக்கும் ஒரு விஷயம். 'பாயும் புலி' படத்தின் கிளைமாக்சில் நடிப்பது பயமாகவும், ஆர்வமாகவும் உள்ளது. என்னால் முடிந்த அளவிற்கு அந்தக் காட்சியில் நடிப்பேன். விடிய விடிய இந்தக் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'பாண்டிய நாடு' படத்திலும் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. அந்தக் காட்சியும் இரவு நேரத்தில்தான் படத்தில் இருந்தது, அதே போல 'பாயும் புலி' படத்தின் கிளைமாக்சையும் இரவு நேரக் காட்சியாகத்தான் வைத்துள்ளார்கள் போலிருக்கிறது. விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.