ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் இருந்து இனிமே இப்படித்தான் படத்தில் மாறுபட்ட ஹீரோவாக நடித்துள்ளார் சந்தானம். முதல் படத்திலேயே தனது அதிரடியான நடனத்தினால் கோலிவுட்டில் இளவட்ட ஹீரோக்களை அதிர வைத்த சந்தானம், இந்த புதிய படத்தில் அனைத்து ஏரியாக்களிலும் கலக்கி எடுத்திருக்கிறாராம்.
இதுபற்றி இனிமே இப்படித்தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் தம்பி ராமைய்யா கூறும்போது, இந்த படத்தில் சந்தானத்தின் நடிப்பு ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. அவருடன் ஏற்கனவே கண்டேன் காதல், வீரம் படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன்.
அந்த படங்களில் காமெடியனாக நடித்தபோதே அவரது உழைப்பு கடினமாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் இன்னும் பன்மடங்கு உழைத்திருக்கிறார்.அதோடு, இந்த படத்தில் யூத்துக்கு சைட் அடிப்பது எப்படி என்பதை அருமையாக சொல்லிக்கொடுக்க வருகிறார் சந்தானம். இந்த படத்திற்கு பிறகு சந்தானம் கொடுக்கிற ஐடியாபடிதான் நம்ம ஊர் இளவட்டங்கள் சைட் அடிப்பார்கள்.
மேலும், சந்தானம் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அவர் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறார். பெரிய அளவில் வளர்ந்த பிறகும் அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. இதற்கெல்லாம் மேலாக, ஆன்மீகத்தில் அவருக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டது. இந்த இளம் வயதிலேயே அவரிடம் இருக்கும் ஆன்மீக அறிவைக்கண்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன் என்கிறார் தம்பி ராமைய்யா.