ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரையின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த லயன் படம் ரசிகர்களின் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. பாலகிருஷ்ணாவின் 98-வது படமான லயன் படத்தைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு டிக்டேட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் பின்னர் இப்படத்தின் முதல்கட்ட வேலைகள் மே 29 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிகின்றது. அதன் பின்னர் ஜூன் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என கூறப்படுகின்றது. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.