ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்யா நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை படம் வெளியான இன்று ஆர்யா சென்னையில் இல்லை. கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார். அதன் காரணமாக சில தினங்களுக்கு முன் நடைபெற்ற புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தின் புரமோஷனுக்குக் கூட அவர் வரவில்லை.
இந்நிலையில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை இன்று ரிலீஸ் ஆனபோது படத்தின் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தார் ஆர்யா. அதுமட்டுமல்ல, தன்னுடைய நடிப்பை மக்கள் எப்படி ரசித்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்த ஆர்யா, தனக்கு நெருக்கமான சில பத்திரிகையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தின் ரிசல்ட் பற்றி கேட்டறிந்திருக்கிறார். அதோடு தன்னுடைய கேரக்டர் பற்றி மீடியாக்களின் கருத்து என்ன என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்துக்கு மீடியாக்கள் மத்தியில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதை அறிந்து செம மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆர்யா.