பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்கள் நித்யாமேனனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்காதபோதும், அதையடுத்து அவர் நடித்த ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்கள் அவரை வெற்றிப்பட நாயகியாக்கி விட்டன. அதனால், இதுவரை அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்த கமர்சியல் டைரக்டர்கள் இப்போது அவரிடம் கால்சீட் வாங்க நீண்ட கியூவில் நிற்கின்றனர். அதோடு, உயரமான ஹீரோக்களுடன் நடிப்பதற்கு ஏற்ற உயரம் அவரிடம் இல்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டி, பாடல் காட்சிகளில் எப்படி நடனமாடுவீர்கள்? என்கிறார்களாம். அதற்கு, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் 6 அடிக்கும் அதிகம் உயரம் கொண்ட அனுஷ்காவுடன் இணைந்து ஒரு பாடலில் நான் நடனமாடியிருக்கிறேன். அப்போது அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் அணிந்து கொண்டு நடனமாடினேன். அப்போது எனது உயரம் ஒரு குறையாகவே தெரியவில்லை. அதனால், எத்தனை பெரிய உயரமான ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கக்கூடிய தைரியம் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வரும் நித்யாமேனன், அடுத்த மாதம் ராணி ருத்ரம்மா தேவி படம் திரைக்கு வந்துவிடும். அந்த படத்தில் அனுஷ்காவுடன் நான் நடனமாடியிருப்பதை பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் தில்லாக பேசுகிறாராம்.