‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சிம்பு, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்திற்காக இன்னும் சில பாடல் காட்சிகள்தான் எடுக்கப்பட வேண்டும். படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்புவின் தம்பி குறளரசன் பாடல்களைத் தருவதில் மிகவும் தாமதம் செய்ததே படம் தள்ளிப் போனதற்குக் காரணம் என்றும் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் மீதமுள்ள பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார் குறளரசன்.
சமீபத்தில் இந்தப் படத்திற்காக குறளரசன் இசையமைப்பில் மதன் கார்க்கி எழுதிய பாடல் ஒன்றை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் யாராவது நட்பின் அடிப்படையில் அழைத்தால் அவர்களின் படங்களுக்கு ஸ்ருதிஹாசன் பாடிக் கொடுத்து வருகிறார். இதற்கு முன்னும் அவர் பல படங்களில் பாடியிருக்கிறார். ஆனால், சிம்பு நடிக்கும் படம் ஒன்றில் அவர் பாடுவது இதுவே முதல் முறை.
குறளரசன் தற்போது பாடல்களைத் தர ஆரம்பித்துவிட்டதால் விரைவில் 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது. 'வாலு' படம் வெளிவந்த சில வாரங்களுக்குள் 'இது நம்ம ஆளு' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.