இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி ஸ்ரீதிவ்யாவை பரவலாக பேச வைத்ததோடு பல படங்களிலும் கமிட்டானார். ஆனால் அப்படி அவர் அதன்பிறகு நடித்த ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை படங்கள் மீடியமான ஹிட் என்பதால், ஸ்ரீதிவ்யா மீதான பரபரப்பு அடங்கி விட்டது.
தற்போது அவர் நடித்து ஈட்டி, பென்சில் ஆகிய படங்கள் வெளியாக தயார் நிலையில் இருந்தபோதும், இந்த படங்கள் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி இன்னமும் இழுத்தடித்துக்கொண்டு வருவதால் அவருக்கான எதிர்ப்பு இப்போது சுத்தமாக குறைந்து விட்டது.
இந்த நேரத்தில், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படவாய்ப்பு கிடைத்திருப்பது ஸ்ரீதிவ்யாவுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. இதே படத்தில் நயன்தாராவும் இருந்தபோதும், ஸ்ரீதிவ்யாவுக்கும் நல்ல கேரக்டர்தானாம்.
அதனால், இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து கால்சீட்டுகளை வாரி வழங்கியுள்ள ஸ்ரீதிவ்யா, தற்போது சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்று வரும் காஷ்மோரா படப்பிடிப்பில் கார்த்தியுடன் காம்பினேசன் காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக, ரொமான்ஸ் காட்சிகளில் முந்தைய படங்களை மிஞ்சும் வகையில், கார்த்தியுடன் கட்டிக்கலந்தாடிக் கொண்டிருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.