ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புலி வருது, புலி வருது என, அனுஷ்கா நடிக்கும் வரலாற்று படமான, ருத்ரம்மா தேவியைப் பற்றி ஓவராக, பில்டப்புகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகையான நித்யா மேனன், மூட்டு வலியால் துடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில், அனுஷ்காவுடன் இணைந்து நித்யா மேனன் டான்ஸ் ஆடுவது போன்ற பாடல் காட்சி உள்ளதாம். அனுஷ்காவை விட நித்யா, ஏழு அங்குலம் உயரம் கம்மி. இதை சமாளிப்பதற்காக, ஏழு அங்குல உயரமுள்ள, ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து டான்ஸ் ஆடினார். அதனால், அவரின் மூட்டு பெயர்ந்து விட்டதாம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு செருப்பை நான் அணிந்ததே இல்லை என, புலம்புகிறார் நித்யா.