ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அழகிய தமிழ்மகன்-தாமிரபரணி, கத்தி-பூஜை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யின் புலியும், விஷாலின் பாயும் புலியும் ஒரே நாளில் ரிலீஸாகும் சூழல் உருவாகியுள்ளது. கத்தி படத்தை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் புலி. விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி என... ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். புலி படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாடல் காட்சிக்காக புலி டீம், தாய்லாந்து மற்றும் கம்போடியா செல்கிறது.
பேண்டஸி படமாக புலி உருவாகி வருவதால் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் அதிகம் இருக்கிறதாம். இதனால் படத்தை முதலில் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மாற்றினர். ஆனால் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடியாது என்கிறார்கள், அதனால் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளி போகும் சூழல் உருவாகி இருக்கிறதாம். மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே ரிலீஸாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்திருப்பதால் புலி படத்தின் ரிலீஸ் தேதி, விநாயகர் சதுர்த்திக்கு தள்ளி வைக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
அன்றைய தினம் தான் சுசீந்திரன் இயக்கத்தில், விஷாலின், ''பாயும் புலி'' படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விஜய்யின் படமும், விஷாலின் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. இதுபோன்று விஜய்யும், விஷாலும் நேரடியாக மோதிக் கொள்வது மூன்றாவது முறையாகும்.