தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் படம் எலி. சதா ஹீரோயினாக நடிக்கிறார். வடிவேலு, துப்பறியும் ஆய்வாளராக நடிக்கிறார். அவர் துப்பறிய போகும் இடங்களில் எல்லாம் அவர் மாட்டிக்கொண்டு செய்யும் சாகசங்களை எல்லாம் முழுக்க முழுக்க காமெடியாக இயக்கியிருக்கிறார் யுவராஜ் தயாளன். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் பற்றிய தகவல்கள் புதிது புதிதாக வௌிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய தகவல் என்னவென்றால், 1969ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, சர்மிளா தாகூர் நடிப்பில் இந்தியில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க வௌியாகி சூப்பர் ஹிட்டான படம் ஆராதனா. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகின. அதிலும் குறிப்பாக ''மேரே சப்னோகி ராணி....'' என்ற பாடல் மாஸ் ஹிட்டானது. இப்போது இந்த பாடலுக்கு வடிவேலுவும், சதாவும் டூயட் பாடியுள்ளனர்.
இதற்காக ஆராதனா படக்குழுவினரிடம் முறையான அனுமதி பெற்று முழு நீள பாடலையும் எலி படத்தில் சேர்த்துள்ளனர். வடிவேலுவும், சதாவும் ஆடி, பாடும் டூயட் காட்சிகள் மூணாறில் படமாக்கப்பட்டுள்ளது.