ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
* ரம்மியமான அந்த தொகுப்பாளினிக்கும், அவரது கணவருக்கும் இடையேயான பிரிவு அதிகமாகிவிட்டதாம். பலரின் சமாதான பேச்சும் எடுபடவில்லையாம். அதனால் சீக்கிரமே ரம்யம் கோர்ட் படி ஏறலாம் என்கிறார்கள்.
* விருது விழாவை ஏக பிரமாண்டமாக நடத்தினாலும் விழாவுக்கு வந்திருந்தவங்களை சரியாக கவனிக்கவில்லை என்ற சலசலப்பு திரையுலகில் கேட்கிறது. அடுத்த வருடம் விழாவை நடத்தலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறதாம் சேனல்.
* ஆண்டுக்கு இத்தனை படங்கள் வாங்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டால் கதிகலங்கி போயிருக்கிறது சின்ன சின்ன சேனல்கள். கோடிகள் புரளும் பெரிய சேனல் அளவுக்கு எங்ககிட்ட வசதி இல்லை. அதனால் படம் வாங்குறதுக்கு பதிலா படத்தோட விளம்பரங்களை இலவச ஒளிபரப்புறோம்னு கோரிக்கை வச்சிருக்காங்களாம்.
*தனது நிகழ்ச்சிகளின் கான்செப்டை மற்ற சேனல்கள் அப்படியே காப்பி அடிப்பதால் இனி புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பும்போது அதனை பக்காவாக காப்பிரைட் செய்துவிட வெற்றி சேனல் முடிவு செய்திருக்கிறதாம்.
* வி.ஐ.பிக்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளினிக்கும், வெற்றி சேனலுக்கும் கருத்து வேறுபாடு வந்துவிட்டதாம். தொகுப்பாளினி வேறு சேனல் தேடுகிறார். சேனல் வேறு தொகுப்பாளினியை தேடுகிறது. இரண்டையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.
*செய்தி சேனல்கள் நிருபர் வேலைக்கு பெண்களையே அதிகம் தேர்வு செய்கிறதாம். குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும், சில வருடங்கள் வேலை செய்துவிட்டு அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு சென்று விடுவார்கள்.