Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் உள்ள அபூர்வமான ஒரு ஒற்றுமை

12 மே, 2015 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Common-things-between-Nayanthara---Vignesh-sivan

வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொள்வது புதுமையான விஷயமோ... புரட்சிகரமான விஷயமோ இல்லை என்கிற அளவுக்கு சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. பிரபலங்களில் கூட பலர் வயதில் தன்னைவிட மூத்த பெண்ணைத் திரும்ணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் தன்னை விட வயதில் பெரிய பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளார். பாலிவுட் கனவுக்கன்னியான ஐஸ்வர்யாராயை விட அவரை திருமணம் செய்துள்ள அபிஷேக்பச்சன் வயதில் இளையவர்.


நம்ம உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்... தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் 1982 ஆம் வருடம் ஜூலை மாதம் பிறந்தவர். அவர் கைப்பிடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 1982 ஜனவரி மாதம் பிறந்தவர்.


எதற்காக இந்த பழையகதை?


சிம்பு, பிரபுதேவா உடனான காதல் தோல்விக்குப் பிறகு போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டிருக்கிறார் நயன்தாரா. தன் புதிய காதலருக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த நயன்தாரா, அவருடன் அண்மையில் மாலத்தீவுக்கும் சென்று வந்துள்ளார். ஏற்கனவே பல காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா இம்முறை காதலில் தோற்க மாட்டார். விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று உறுதிபடச்சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் உள்ள அபூர்வமான ஒரு ஒற்றுமையையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.


நவம்பர் 18 அன்று பிறந்தவர் நயன்தாரா. செப்டம்பர் 18 அன்று பிறந்தவர் விக்னேஷ் சிவன். அதாவது இருவரது பிறந்த தேதியும் - 18.


பிறந்த தேதி ஒன்றாக இருந்தாலும், பிறந்த வருடம் வேறு வேறு. அதாவது 1984 ஆம் வருடம் பிறந்தவர் நயன்தாரா. 1985 ஆம் வருடம் பிறந்தவர் விக்னேஷ் சிவன். நயன்தாராவைவிட ஒரு வயது இளையவர்.


இது ஒரு தடை இல்லை என்றும், இருவரது பிறந்த தேதியில் உள்ள ஒற்றுமையே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலை சேர்த்து வைத்துவிடும் என்று ஜோதிடம் சொல்கிறார்கள் நயனின் நலம் விரும்பிகள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in