தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்குள் நிறையவே ஒற்றுமை உள்ளது. ஒருவர் இசையில் மற்றவர் எந்த ஈகோவும் இல்லாமல் வந்து பாடி கொடுக்கிறார்கள். யுவன் இசையில் இமான், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்கள். இமான் இசையில் அனிருத் பாடியிருக்கிறார். தமன் இசையில் அனிருத் பாடியிருக்கிறார். இப்படி தொழில் ரீதியாக தங்களுக்குள் போட்டி இருந்தாலும் நட்பு முறையில் ஒருவர் இசையில் மற்றவர் பாடுவதில் எந்த போட்டியையும் அவர்கள் பார்ப்பதில்லை.
யுவன் ஷங்கர் ராஜா, 'மரியான்' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டாகியது. யுவனின் குரலில் ஒரு ஏக்கமும், வசீகரமும் கலந்திருக்கும். இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வேறொரு இசையைமப்பாளர் இசையில் பாடப் போகிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து நாயகனாக நடிக்கும் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலைப் பாட உள்ளாராம். ஒரு பெப்பியான பாடலாக அந்தப் பாடல் வரப் போகிறது என ஜி.வி.பிரகாஷே தெரிவித்துள்ளார்.