‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனுவும், டி.வி.தொகுப்பாளினி கீர்த்தியும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். இப்போது இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க வருகிற ஆகஸ்ட் மாதம் 21ந் தேதி திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
இந்த காதலுக்கு ஓகே சொன்னது எப்படி என்பது பற்றி கே.பாக்யராஜ் கூறியிருப்பதாவது: சாந்தனுவும், கீர்த்தியும் சிறு வயதுமுதலே நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் ஒன்றாக நடனம் கற்றார்கள். சாந்தனு கீர்த்தியை காதலிக்கும் விஷயம் எனக்குத் தெரியாது. அதை சாந்தனு அவுங்க அம்மாவிடம் தான் முதலில் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் எனக்குத் தெரியும். கீர்த்தியும் தன் காதல் பற்றி அவர்கள் வீட்டில் பேசியிருக்கிறார். கீர்த்தி குடும்பத்திலிருந்து கலா, பிருந்தா (டான்ஸ் மாஸ்டர்கள்) உள்ளிட்ட எல்லோரும் வந்தார்கள். இரு குடும்பமும் உட்கார்ந்து பேசி திருமணத்தை ஆகஸ்ட் மாதம் நடத்த முடிவு செய்தோம்.
என்னுடைய திருமணம் திருவேற்காடு கோவிலில் நடந்தது. என் மகன் திருமணத்தையும் அங்கு நடத்த விரும்பினேன். அப்போது எம்.ஜி.ஆர். இருந்ததால் அது சாத்தியமாச்சு. இப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.