ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல இயக்குனர் ராஜமௌலியின் வரலாற்று காவியமான பாகுபலியின் ஒவ்வொரு போஸ்டர்களாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் வில்லன் அவதாரமான காலகேயாவின் பார்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் மிரட்டி உள்ளது. கருப்புநிற ரத்தம் பொதிந்த கண்களுடன் கொடூர தோற்றத்துடன் கையில் வினோதமான சூலாயுதத்துடன் ஒட்டுமொத்த இனத்தையே அழிக்க துடிக்கும் ராட்சசனாக நடந்து வரும் காட்சியை பிரம்மாண்டமாக போஸ்டரில் காண்பித்துள்ளனர்.
இது குறித்து இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டரில், மனித ரத்த தாகத்தோடு தீய செயல்கள் மூலம் அனைத்தையும் தன் வசப்படுத்த விரும்பும் காட்டுமிராண்டி தலைவன் காலகேயவே... எந்த இனத்தை அழிக்க கிழம்புகிறாயோ... பாகுபலி தி பிகின்னிங் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கொடூர வேடத்தில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் பிரபாகர் ஆவார். இவர் மரியாத ராமண்ணா மற்றும் தொங்காடா போன்ற படங்களில் தனது நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்திருப்பது நினைவிருக்கலாம். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வரும் மே 31ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதற்கான விழா ஏற்ப்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.