விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சிம்பு ஜோடியாக த்ரிஷா மீண்டும் ஜோடியாக நடிக்க சம்மதித்தும், த்ரிஷா - வருண் மணியின் திருமண முறிவுக்கு ஒரு காரணமாக பேசப்பட்டு வருகிறது. கடைசியில் அந்தப் படத்தில் த்ரிஷாவால் நடிக்க முடியாமல் போய்விட்டது. த்ரிஷாவை அந்தப் படத்திலிருந்தே தூக்கியதே வருண் மணியன் தான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், த்ரிஷாவால் அந்தப் படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியாததே காரணம் என்கிறார்கள். தேதியைப் பற்றியெல்லாம் பேசாமலா படத்திற்கான ஃபோட்டோ செஷன்-ஐ கடந்த வாரம் நடத்தியிருப்பார்கள். த்ரிஷாவும் அதைப் பற்றிப் பெருமையாக டிவிட்டரில் போட்ட பிறகு இப்படி நடிக்காமல் இருப்பாரா ?. சில நாட்கள் கழித்து அதற்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
இதனிடையே, இப்போது செல்வராகவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க 'மெட்ராஸ்' படத்தின் நாயகி கேத்தரின் தெரேசாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடனடியாக கால்ஷீட் கொடுக்கும் நடிகை தேவைப்பட்ட போது கேத்தரின் அதற்குத் தக்கபடி தேதிகளை ஒதுக்கித் தர சம்மதித்துள்ளாராம். இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம், இந்தப் படத்திற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இவர் நடித்து விரைவில் 'ருத்ரமாதேவி' படம் வெளிவர உள்ளது. அதோடு 'கணிதன்' படத்திலும் நடித்து வருகிறார். கையில் வேறு எந்தப் படமும் இல்லாததால் பெரிய இயக்குனர், நடிகர் என்பதால் கேத்தரினும் நடிக்க சம்மதித்தார் என்கிறார்கள்.