ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆன்ட்ரியா, தனி ஹீரோயினாக அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு பரபரப்பான ஹீரோயினாக பேசப்பட்டு வருகிறார். கமல்ஹாசன் கூடவே தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து விட்டதால் மற்ற இளம் நடிகர்கள் ஆன்ட்ரியாவை தங்களது படங்களில் நடிக்க்க் கூப்பிடவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. முதல் முறையாக இளம் நடிகரான ஜெய் ஜோடியாக ஆன்ட்ரியா நடித்த 'வலியவன்' படம் படுதோல்வியடைந்துவிட்டது. தற்போதைக்கு வேறு எந்த முன்னணி இளம் நடிகருடனும் ஆன்ட்ரியா நடிக்கவில்லை.
இப்போதைக்கு ஆன்ட்ரியா நடித்து வரும் ஒரே படம் 'தரமணி' மட்டுமே. 'கற்றது தமிழ்' ராம் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் வசந்த் ரவியுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்தப் படத்தைத் தவிர வேறு எந்தப் புதுப்படமும் ஆன்ட்ரியாவிற்கு ஒப்பந்தமாகவில்லை.
ஆன்ட்ரியாவை முன்னணி இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் அதிகமாகக் கண்டு கொள்வதேயில்லை. அந்த வருத்தத்தைப் போக்குவதற்காக அவரே ஒரு பேட்டியில் மணிரத்னம் இயக்கும் காதல் படத்தில் நடிக்க ஆசை என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இப்படி ஏதாவது பேட்டி மூலமாவது அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியுமில்லையா..?