இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஹன்சிகாவின் கைவசம் அதிகப்படியான படங்கள் இருப்பது போன்றொரு மாயை இருந்தாலும், அதில் பல படங்கள் சின்ன படங்கள்தான். விஜய்யுடன் நடிக்கும் புலி மட்டும்தான் பெரிய படம். ஆனால் அந்த படத்திலும் முதல் ஹீரோயினி என்றால் அது ஸ்ருதிஹாசன். முன்பு வேலாயுதம் படத்தில் எப்படி ஜெனிலியா முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலும், ஹன்சிகா விஜய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தாரோ அதேபோல்தான். இப்போது புலியில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா. இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கும் அரண்மனை-2 படத்திலும் தற்போது நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் ஹன்சிகா. ஆனால் சித்தார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதனால் அவர்தான் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாம். இருப்பினும், அரண்மனை படத்தில் தன்னை லீடு ரோலில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி. அந்த படமும் மெகா ஹிட்டானது. அதனால் அந்த சென்டிமென்ட்டுக்காகவாவது தனக்கு நல்ல வேடம் கொடுப்பார் என்று நம்பிக்கையில்தான் அப்படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் ஹன்சிகா.