‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள புறம்போக்கு படம் வருகிற 15ந் தேதி வெளிவருகிறது. இதில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்துள்ளனர். வர்ஷன் இசை அமைத்துள்ளார். இதில் விடுதலை போராளியாக வரும் ஆர்யாவை கார்த்திகா காதலிப்பார். அவருடன் குளுமனாலி லொக்கேஷனில் டூயட் பாடலும் உண்டு. ஆர்யா தூக்கிலிடப்பட்ட பிறகு காதலன் போராட்டத்தை கார்த்திகா முன்னெடுத்து செல்வார். அவருக்கு துணையாக வருகிறவர் விஜய் சேதுபதி. அவருக்கு கார்த்திகாக மீது காதல் பிறக்கும். அவரது கனவு பாடலாக "ஒரே ஒருமுறை..." என்ற காதல் பாடல் படம்பிடிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்தின் நீளம் இரண்டரை மணி நேரத்தை தாண்டுவதால் அந்த பாடல் காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டார் இயக்குனர் ஜனநாதன். கார்த்திகா, இசை அமைப்பாளர், வர்ஷன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோருக்கு பிடித்த பாடல் அது. அவர்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் இயக்குனார் ஜனா பாடலை நீக்குவதில் உறுதியாக இருந்துவிட்டார். படத்தின் நீளம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆர்யா, கார்த்திகாவின் காதலின் தூய்மையை அந்த பாடல் கெடுத்துவிடுமோ என்று ஜனா பயந்ததும் ஒரு காரணம் என்கிறார்கள் பட யூனிட்டார்.