ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
இளையராஜா அன்றிலிருந்து இன்று வரை பெரிய இயக்குனர்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார், அறிமுக இயக்குனர்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார். பெரிய நடிகர்கள் படங்கள், சிறிய நடிகர்கள் படங்கள் என்று எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார். ஆனால், இன்று வளர்ந்து வரும் பல இசையமைப்பாளர்கள் புதியவர்களின் படங்களுக்கு இசையமைக்கத் தயங்கி வருகிறார்கள். அந்த விதத்தில் இளையராஜா என்றுமே மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருப்பார்.
இப்போது அறிமுக இயக்குனர் அக்ஷயப் பிரியன் இயக்கும் 'கட்டம் போட்ட சட்ட' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 'நாடோடிகள், தரணி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அஜய் கிருஷ்ணா இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அக்ஷயப் பிரியன் தனியார் தொலைக்காட்சியில் 'ஊர்வம்பு' என்ற நிகழ்ச்சியை பல வாரங்கள் இயக்கியவர்.