Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தூக்குத்தண்டனை மனித இனத்துக்கு அவசியம்தானா? - டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன்

10 மே, 2015 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Death-Penalty-need-or-not-:-S.P.-Jananathan-speech

இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் தற்போது இயக்கியிருக்கும் படம் புறம்போக்கு என்னும் பொதுவுடமை. இப்படத்தில் ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி, கார்த்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு வர்ஷன் என்ற புதியவர் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை யூடிவி தயாரித்துள்ளது.


இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது, இந்த படத்தை யூடிவியிடம் இருந்து ஒரு தொகையை வாங்கி நானே தயாரித்து இயக்கியிருக்கிறேன். அதனால் பொறுப்பு அதிகமானது. அதேசமயம் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. அதனால் எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஆகாமல் நான் நினைத்தபடியே படமாக்கியிருக்கிறேன்.


மேலும், உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து நானூறு பேருக்கு மேல் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள். பல கம்யூனிஸ்ட் தோழர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதுபோன்ற விசயங்களை மனதில் கொண்டுதான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது. முக்கியமாக, தூக்கு தண்டனை மனித இனத்துக்கு தேவையா? என்பதைத்தான் இந்த படம் சொல்ல வருகிறது.


இப்படத்தில் ஆர்யா ஒரு புரட்சியாளராக நடித்துள்ளார். புரட்சியாளன் என்றாலே கறுப்பு நிறத்தில் தாடி வைத்தவர்களாகத்தான் இதுவரை சினிமாவில் காண்பித்து வந்துள்ளனர். ஆனால் அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் ஆர்யாவை நடிக்க வைத்தேன். காரணம், பகத்சிங் போன்ற புரட்சியாளர்கள் ரொம்ப அழகானவர்களாக இருந்துள்ளனர். அதனால் ஆர்யா இந்த ரோலுக்கு பொருத்தமாகவே இருந்தார்.


அதேபோல் ஷாம் ஒரு இன்ஸ்பெக்டராக நடிக்க, விஜயசேதுபதி ஒரு யதார்த்தமான ரோலில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரொம்ப இயல்பாக வந்துள்ளது. கார்த்திகா குயிலி என்றொரு பெண் போராளியாக வருகிறார். ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அவரை, ஆக்சன் நாயகியாக நடிக்க வைத்திருக்கிறேன். அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் மற்ற இயக்குனர்களும் நடிக்க வைப்பார்கள்.


மேலும், இது மல்டி ஹீரோ கதை என்பதால் இந்த நடிகர்களுக்கிடையே ஈகோ வருமோ என்கிற பயமும் முதலில் இருந்தது. ஆனால், ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி ஆகிய மூன்று பேருமே எந்தவித சலசலப்பும் செய்யாமல் என் மீதுள்ள நம்பிக்கையில் அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர். இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த 120 நாட்களும் துளியும் ஈகோ என்பது இல்லாத நண்பர்களாக பழகினார்கள். அதோடு, புறம்போக்கு படப்பிடிப்பில் எங்களுடன் இருந்த ஒரேயொரு பெண் கார்த்திகாதான். வேறு எந்த பெண் கதாபாத்திரம் இந்த படத்தில் கிடையாது என்று சொன்ன எஸ்.பி.ஜனநாதன், இதற்கு முன்பு இயற்கை படத்தின் பிரஸ்மீட்டில் நான் பேச வரும்போது கரன்ட் போய் விட்டது. அதேபோல் இப்போது நான் பேசத் தொடங்கியதுமே மைக் சரியானபடி ஒர்க் ஆகாமல் தடங்கல் வந்துள்ளது. ஆக, தடங்கல் ஏற்பட்டாலே எனக்கு சக்சஸ்தான் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in