டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
டோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த இலியானா தேவதாசு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இலியானா நடித்தார். கோலிவுட் திரைரசிகர்கள் கைவிட்ட இலியானா பாலிவுட்டிற்கு சென்று தற்போது முழித்துக் கொண்டிருக்கின்றார். தெலுங்கு திரையில் தனக்கு வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு இந்தி படங்களில் நடிக்க சென்ற இலியானாவிற்கு தற்போது அங்கு மார்கெட் இல்லையாம். இதனால் மீண்டும் டோலிவுடிற்கே நடிகை இலியானா திரும்பியுள்ளார். உச்ச நட்சத்திரமாக ஜொலித்த இலியானாவின் இடத்தை பல நடிகைகள் பிடித்து விட்டனர். இதனால் குத்தாட்டம் போடும் வாய்ப்பை மட்டுமே அவருக்கு கொடுத்துள்ளனர். நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலாவின் மகன் அகில் நடிக்கும் படத்தில் தான் இலியானா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட உள்ளார். இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வரும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைய்கல் நடித்து வருகின்றார்.