Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெர்சனலை ஒருபோதும் சினிமாவுடன் கலக்க மாட்டேன் : அமிதாப் பச்சன்

09 மே, 2015 - 12:45 IST
எழுத்தின் அளவு:
I-don't-mix-my-personal-and-professional-lives--Amitabh-Bachchan

பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக நீண்டகாலமாக விளங்கி வரும் அமிதாப் பச்சன், பிகு படம் குறித்தும், அதன் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....


படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கிறீர்கள்...அதற்கு உங்கள் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது?


(சிரித்துக்கொண்டே) எனக்கு இப்போது 73 வயது ஆகிறது. என்னால் முடிந்தஅளவிலான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். என்னால் தற்போதைக்கு, தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது. என்னால் என்ன முடியுமோ, அதற்கான கேரக்டர்களிலேயே நடிப்பதால், எவ்விதமான எதிர்மறை விளைவுகளையும் தான் உணர்வதில்லை....


உங்கள் கேரக்டர்களுடன் நிஜ வாழ்க்கையை தொடர்புபடுத்துவதுண்டா?


இல்லை. நான் ஒருபோதும், என்னுடைய நிஜ வாழ்க்கையை, செய்யும் தொழிலுடன் தொடர்புபடுத்துவதில்லை. உதாரணமாக, பிகு படத்தில், தீபிகா படுகோனே எனது மகள் கேரக்டரில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே, பிகு கேரக்டரில் நடித்துள்ளார். அந்த இடத்தில், தீபிகா படுகோனேவை, நான் மகளாக பார்க்கவில்லை, பிகுவாகவே பார்த்தேன். அதேபோல, தீபிகா என்னை, அப்பா கேரக்டரிலேயே பார்த்தார்.


உண்மை மனிதர்களை கேரக்டர்கள் பிரதிபலிக்கின்றனவா? இதில் உங்களது கருத்து என்ன?


என்னைப் பொறுத்தவரை, படப்பிடிப்பில் இருக்கும் வரையே, நான் அந்த கேரக்டராக இருப்பேன், சூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியே வந்து விட்டால், நான் சாதாரண அமிதாப் பச்சன் தான். வீட்டில் இருக்கும்போது, என் குடும்பஉறுப்பினர்களின் பாதுகாவலன் அவ்வளவே. மற்றபடி, ஒருபோதும், எவரின் குணாதிசயங்களையும் நான் பிரதிபலிப்பதில்லை....


இர்பான் மற்றும் தீபிகாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து..


இர்பான் கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன் பிகு படத்தில் இணைந்து பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. நான் தீபிகாவுடன் ஏற்கனவே ஆரக்ஷான் படத்தில் இணைந்து நடித்துள்ளேன். தீபிகா சிறந்த நடிகை. இர்பான் கானுடன் முதன்முதலாக இணைந்துள்ளேன். இர்பான் சிறந்த மனிதர்.


உங்கள் உடல்நிலை குறித்து வந்த செய்தி உண்மையானதா?


(சிரித்துக்கொண்டே) நானும் அதுமாதிரி வெளியான வதந்திகளை படித்தேன். அதில் துளியளவும் உண்மையில்லை. நான் பூரண உடல்நலத்துடன் இருக்கிறேன். லீலாவதி மருத்துவமனைக்கு, ரெகுலர் ஹெல்த் செக்அப்பிற்காகவே சென்றிருந்தேன். எனக்கு தற்போது 73 வயது ஆகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை, மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். பிகு படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் நான் எப்போதும்போல அதே உற்சாகத்தோடு தான் பங்கேற்றதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in