ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாடோடிகள் உட்பட பல படங்களைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் கடைசியாக தயாரித்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சில கோடிகளை இழந்தார் மைக்கேல் ராயப்பன். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தயாரிப்பில் இருந்தபோதே, அதர்வாவை வைத்து ஈட்டி என்ற படத்தையும் தயாரிக்க ஆரம்பித்தார். வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு என்பவர்தான் இயக்குநர். இவரை மைக்கேல் ராயப்பனுக்கு அறிமுகப்படுத்தியதோடு, தன்னுடைய க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத் தருவதாகவும் சொன்னார் வெற்றி மாறன். அதை நம்பி பல கோடிகளை முதலீடு செய்தார் மைக்கேல் ராயப்பன். இதற்கிடையில் அதர்வா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைய ஆரம்பித்தன. கடைசியாக அவர் நடித்த இரும்புக்குதிரைகள் படம் சூப்பர் ப்ளாப். எனவே ஈட்டி படம் வளர்வதில் தடங்கள் ஏற்பட்டது. மார்க்கெட்டை இழந்துவிட்ட அதர்வாவை வைத்து இந்தப்படத்தைத் தயாரிப்பது பெரிய ரிஸ்க் என்று நினைத்தோ என்னவோ... 50 லட்சம் லாபம் வைத்து ஈட்டி படத்தை கைமாற்றிவிட்டார் மைக்கேல் ராயப்பன்.