டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இளமைத் துள்ளும் "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" இசை நிகழ்ச்சி மூலமாக மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வருகிறார் இளம் இசை மேதை யுவன் சங்கர் ராஜா!புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் Green Trees Solutions அமைப்புடன் கைகோர்த்து சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார் யுவன். வருகின்ற மே மாதம் 9-ம் தேதி யுவன், முதன்முறையாக திருநெல்வேலி, பெல்பின் மைதானத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் இசைக் கலைஞர்களோடு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்.மண்மணக்கும் நமது இசையை உலகெங்கும் ஒலிக்கச்செய்த நம் மண்ணின் மைந்தன் இசைஞானி இளையராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதன் கூடுதல் சிறப்பு. பசுமை புரட்சிக்கு வித்திடும் இம்மாபெரும் சமூக நலன் சார்ந்த இசை நிகழ்ச்சியை அனுபவிக்க தயாராகுங்கள்.