தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அது சொத்தை.. இது சொத்தை என எந்த கேரக்டரையும் ஒதுக்குவதில்லை ரம்யா நம்பீசன்... அதேபோல வருடத்துக்கு இத்தனை படங்களில் நடிக்கவேண்டும் என கணக்கும் வைத்துக்கொள்வதில்லை.. 2013ல் பத்து படங்கள் ரிலீசானபோது என்ன மனநிலையில் இருந்தாரோ, அதேதான் கடந்தவருடம் அவர் நடித்து ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீசானபோதும் கூட அவருக்கு இருந்தது. ஆனால் இந்த வருடம் தமிழில் அவர் நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. தவிர மலையாளத்தில் மூன்றும் கன்னடத்தில் ஒன்றுமாக நான்கு படங்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது லேட்டஸ்ட்டாக பிரபல இயக்குனர் சிபிமலயில் இயக்கும் 'சைகல் பாடுகிறயானு' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் டாம் சாக்கோ.. யெஸ்.. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அதே டாம் சாக்கோ தான். இதில் சாக்கோ ஆட்டோ ட்ரைவராக நடிக்கிறார். சாக்கோவின் அம்மாவாக தமிழ் நடிகை சுமித்ரா நடிக்கிறார். இந்தக்கதை கோழிக்கோடு நகர பின்னணியில் நடைபெறுகிறதாம்.