ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது டோலியுட்டில் தயாராகி வரும் குழந்தைகள் ஸ்பெஷல் தன வீரசூர கர்ணா படத்தின் ஆடியோ மிகப்பெரிய அளவில் ரிலீசாகி இருக்கின்றது. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படமாகும். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மறைந்த பிரபலமான நந்தமூரி ஜானகிராமின் மூத்த மகனான தாரக ராமா ராவ் என்ற மாஸ்டர் என் டி ஆர் நடிக்கிறார். கிருஷ்ணா பரமாத்மாவின் கதை பின்புலத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் நிறைய குழந்தைகள் நடிக்கின்றனர். கடவுள் கிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் மாஸ்டர் என் டி ஆர் நடிக்கிறார். நந்தமூரி ஜானகிராமின் இளைய மகனான சௌமித்ரா, சகாதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஜூனியர் என் டி ஆர், கல்யாண் ராம் மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபல இயக்குனரான ஜே வி ஆர் இயக்கும் தன வீரசூர கர்ணா படத்தை பிரபல சலசணி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் பாலராஜு இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தை பற்றி ஜூனியர் என் டி ஆர் கூறும்போது, எங்கள் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் 4ஆம் தலைமுறையினரின் படமாகும். மாஸ்டர் என் டி ஆர் மற்றும் மாஸ்டர் சௌமித்ரா ஆகியோர் இந்த சிறு வயதிலேயே தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும் முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை வைத்து எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்காகவே படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை நான் மனதார பாராட்டுகின்றேன் என்றார்.
கல்யாண் ராம் பேசும் போது, 4ஆம் தலைமுறை குழந்தைகளான மாஸ்டர் என் டி ஆர் மற்றும் சௌமித்ரா ஆகியோருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு நிச்சயம் கொடுப்பார்கள் என்றார். பிரபல இசை அமைப்பாளர் கௌசல்யா இசை அமைத்துள்ளார். இந்த குழந்தைகள் ஸ்பெஷல் வரும் மே 28ம் தேதி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலைசிறந்த நடிகரும், ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதல்வருமான தாரக ராமாராவின் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1977ம் ஆண்டு வெளிவந்த தனவீரசூர கர்ணா படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தது மறைந்த தலைசிறந்த நடிகரான என் டி ராமாராவ் ஆகும்.