அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் தனுஷ். அதையடுத்து இப்போது காக்கா முட்டை படத்தை டைரக்டர் வெற்றி மாறனுடன் இணைந்து தயாரித்து இந்த படத்துக்காகவும் தேசிய விருது பெற்றிருக்கிறார். ஆக, ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று விட்டார் தனுஷ். மேலும், இந்த படத்தின் கதையை மணிகண்டன் சொன்ன போதே தனுசுக்கு ரொம்ப பிடித்திருந்ததாம். அந்த கதையை கேட்க கேட்க அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கேரக்டர்களான பெரிய காக்கா முட்டை, சிறிய காக்கா முட்டை என்ற இரண்டு கேரக்டர்களும் அவருக்கு வேற்றுமையாக தெரியவில்லையாம். தனது பள்ளிக்கூட காலத்தை ஞாபகப்படுத்தியதாம்.
அதாவது, அந்த இரண்டு கேரக்டர்களில் பெரிய காக்கா முட்டை அவரது அண்ணன் செல்வராகவனைப் போலவும், சிறிய காக்கா முட்டை தன்னைப் போலவும் தான் அவருக்கு தோன்றியதாம். அதனால் தான், காக்கா முட்டை படத்தை தயாரிப்பதில் அதிக ஆர்வமாக இருந்தாராம் தனுஷ். அப்படி தான் விரும்பி தயாரித்த அந்த படத்துக்கு இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது தனக்கு ரொம்ப பெருமையாக உள்ளதாகவும் கூறுகிறார் தனுஷ்.