தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கும்கி படத்தில் தமிழுக்கு வந்த லட்சுமி மேனன் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாகி விட்டார். தமிழைப்போலவே தாய்மொழியான மலையாளத்திலும் ஒரு இடம் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருந்தபோதும் கடைசியாக அவர் நடித்த அவதாரம் படம் வெற்றி பெறாததால் புதிய படங்கள் கிடைக்கவில்லையாம்.
அதோடு, தற்போது தமிழிலும் புதிதாக படங்கள் இல்லாததால், நடனத்தில் தனது ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம் லட்சுமிமேனன். அவரது தாயார் உஷா மேனன், கேரளாவில் உள்ள திருப்புனிதுரா பள்ளியில் நடன ஆசிரியை என்பதால் சின்ன வயதில் இருந்தே லட்சுமிமேனனுக்கு முறையாக நடனம் சொல்லிக்கொடுத்து வந்தாராம்.
அதோடு, பள்ளியில் தன்னிடம் நடனம் பயின்ற மாணவிகளில் ஏராளமானவர்களை நடனக்கலையில் சிறந்தவர்களாக உருவாக்கியிருக்கிறாராம் உஷாமேனன். அதனால் அவர்கள் கேரளாவில் நடத்தி வரும் நடன நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி தலைமை தாங்கவும் சென்று வருகிறாராம் அவர்.
மேலும், தற்போது சினிமாவில் போதுமான வாய்ப்பு இல்லாததால் தானும் நடனத்தில் கவனத்தை திருப்பியிருக்கும் லட்சுமிமேனன், எதிர்காலத்தில் சினிமா கைகொடுக்காவிட்டால், தனது அம்மாவிடம் நடனம் பயின்ற பெண்களை ஒன்றிணைத்து ஒரு நடனக்குழு அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதன்மூலம் கேரளா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடன நிகழ்சசி நடத்துவராம் லட்சுமிமேனன்.