பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவா இயக்கத்தில் அனிருத் இசையைமப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகிறது. இதற்காக பின்னி மில்லில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் அஜித், லட்சுமி மேனன் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்கள். 'என்னை அறிந்தால்' படம் வெளியான உடனேயே அஜித் அடுத்த பட வேலைகளில் இறங்கி விட்டார். தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த்தால் படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பிப்பதை அவர் தள்ளி வைக்கச் சொன்னார். குழந்தை பிறக்கும் போது மனைவி ஷாலினியுடன் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டார்.
குழந்தை பிறந்து பெயர் சூட்டும் நடந்த பிறகுதான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. அனைத்தும் முடிந்து இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ளார். இடையில் இயக்குனர் சிவாவுடன் படத்திற்கான விவாதத்திலும் கூட அஜித் கலந்து கொண்டார் என்கிறார்கள். 'என்னை அறிந்தால்' படம் வெற்றிப் படம்தான் என்றாலும் இன்னும் அதிகமான வெற்றியை எதிர்பார்த்துள்ளார்கள். தொடர்ந்து 'ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால்' ஆகியவை சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று வருவதால் அடுத்த படத்தை சூப்பர் வெற்றியாக ஆக்க வேண்டும் என்று அஜித் சொல்லியுள்ளாராம். இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.