Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்துள்ளேன்! -வனிதா விஜயகுமார் உருக்கம்

07 மே, 2015 - 12:54 IST
எழுத்தின் அளவு:
I-am-like-a-phoenix-bird-says-Vanitha-vijayakumar

1995-ல் சந்திரலேகா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதையடுத்து ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம் படத்தில் நடித்தார். தொடர்ந்து, சில படங்களில் சிறிய கேரக்டர்களில் மட்டுமே நடித்திருந்தார்.


பின்னர், திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகிய அவர், பல ஆண்டுகளுக்கப்பிறகு தற்போது வனிதா பிலிம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ''எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்'' ரசிகர்கள் நற்பணி மன்றம் என்ற படத்தை தயாரித்துள்ளார். அதோடு, இப்படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி தானும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் வனிதா. மேலும், படத்தில் நாயகனாக நடித்துள்ள ராபர்ட் படத்தை இயக்கியிருக்கிறார்.


இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, மீடியாக்கள் முன் தோன்றிய வனிதா விஜயகுமார், தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் பேசுகையில், நான் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே எனக்கு ஆதரவு அளித்து வருவது மீடியாக்கள் தான். அதேசமயம் நான் தவறு செய்தால் என்னை தட்டிக்கேட்பது, நான் கலங்கி நின்றபோது எனக்கு ஆறுதல் சொன்னது எல்லாமே மீடியா நண்பர்கள் தான்.


இப்போதுகூட என் குடும்பத்தை சந்திக்க வந்திருக்கிற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், நெருப்பில் விழுந்து எரிந்த பீனிக்ஸ் பறவை சூரியனை நோக்கி பறந்து செல்வது போன்று மீண்டு வந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் இது ஒரு படம். ஆனால் எனக்கு வாழ்க்கை. அதனால் நல்லபடியாக படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து படம் வெற்றி பெற உதவி செய்யுங்கள் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in