'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நடிப்பில், பரத்பாலா இயக்கத்தில் உருவான மரியான்' படம் தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.
தற்போது இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கில் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதிவு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வருகின்றது. ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து மரியான் படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையைக் கைப்பற்றிய ஷோபா ராணி தற்போது இப்படத்தை தாயாரித்து வருகின்றார். இப்படத்தின் மொழி மாற்றம் மற்றும் பாடல்கள் பதிவு போன்ற பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் இப்படம் இந்த கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.