இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுடின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். மகேஷ் பாபு நடித்த No 1 திரைப்படம் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் இப்படத்தில் அதிக கவனத்துடன் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். தற்போது இப்படத்தில் அணல் பறக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம். நடிகர் சம்பத் ராஜ் மற்றும் மகேஷ் பாபு மோதும் இக்காட்சிகள் அதிக வேகத்துடன் இருக்க வேண்டும் என்பதால் புதுவித யுக்திகளையும் சண்டைக் கலை இயக்குநர் காட்சிகளில் சேர்த்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அலுமினியம் தொழிற்சாலை போன்ற பிரமாண்டமான செட் அமைப்பில் ஸ்ரீமந்துடு பட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம். இசையமைபாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.